Sunday, February 20, 2011

தமிழ் தானியங்கி அருஞ்சொற்பொருள்/TAMIL AUTOMOBILE GLOSSARY


A - வரிசை

A-ARM - கவைக்கரம் - சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் கவை வடிவ தொங்கல் அமைப்பு

ACCELERATOR - முடுக்கி

AIR-FLOW COOLING SYSTEM - காற்றுக் குளிரலமைப்பு

AIR-FUEL MIXTURE - காற்றெரிபொருள் கலவை

AIR BREAK - காற்று நிறுத்தி

AIR FILTER - காற்று வடிப்பி

AIR INTAKE SYSTEM - காற்றிழுவமைப்பு - ஒரு காற்றுக்கலக்கி விசைப்பொறியில் (carburettor engine) வெளிக்காற்று காற்று வடிப்பி (air-filter) மூலம் காற்றுக்கலக்கிக்குள் (carburettor) நுழையும்; பின்பு அது உள்ளிழு பன்மடிமம் (intake manifold) மூலமாக கலன்களுக்குள் (cylinders) நுழையும்; உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) காற்று காற்றிழுவி எனப்படும் நீண்ட தூம்பு மூலமாக காற்று வடிப்பிக்குள் நுழைகிறது. பின்பு காற்றுப்பாய்வளவி (air-flow meter) மூலமாக நெரிப்பறைக்குள் (throttle chamber) சென்று, அதன் பின்னர் விசைப்பொறிக்குள் நுழைகிறது.

AIR PUMP - காற்றிறைப்பி

ALL WHEEL DRIVE - அனைத்தியக்க, அனைத்தியக்கூர்தி -

ALTERNATOR - மாறுமின்னாக்கி

ANTI-FREEZE - உறைத்தடுப்பி - குளிர்பொருள் கடும்பனிக்காலத்தில் உறையாமல் இருக்க, அதன் உறைநிலை குறைக்க வைக்கும் சேர்ப்பொருள்

ANTI-LOCK BRAKING SYSTEM (A.B.S.) - வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும்

ASSEMBLY-LINE - ஒன்றுகூட்டு வரிசை

AUTOMATIC TRANSMISSION - தன்னியக்கப் பரப்புகை

AUTOMOBILE - தானியங்கி

AXLE - அச்சாணி



B - வரிசை

BALL JOINT - பந்துமூட்டு - உந்துவண்டியின் முன்சக்கரங்களை தொங்கலில் (suspension) தாங்கும் கட்டகம்

BELT DRIVE - வாரியக்கி - பற்சக்கரப்பெட்டியிலிருந்து சக்கரங்களை இயக்க கப்பி மற்றும் தோல் அல்லது மீள்ம வார் கொண்ட கட்டகம்

BRAKE - நிறுத்தி

BRAKE DRUM - தேயுருளையம் - வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு; உருளைய நிறுத்தமைப்பில் பயனாகிறது; நிறுத்துவதற்காக ஏற்படும் உராய்வு உட்பரப்பில் அமையும்

BRAKE SHOE - நிறுத்துக்கட்டை

BUMPER - அடிதாங்கி



C - வரிசை

CAMSHAFT - நெம்புருள் தண்டு - விசைப்பொறியின் உள்ளெடுப்பு மற்றும் வெளியேற்ற ஓரதர்களை திறந்து மூடச் செய்யும் சுழலும் சாதனம்

CARBURETTOR - காற்றுக்கலக்கி - எரியறைக்குள் உள்ளிழு வெற்றிடத்தால் (intake vacuum) எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு

CATALYTIC CONVERTER - வினையூக்க மாசகற்றி - வெளியேறி நச்சு வளிகளை குறைக்கச்செய்யும் சாதனம்

CENTRIFUGE - மையவிலக்கி -

CHASSIS - அடிச்சட்டம்

CLUTCH - உரசிணைப்பி, விடுபற்றி

COMBUSION CHAMBER - எரியறை

CONNECTING ROD - இணைப்புக் கம்பி - ஆடுதண்டையும் (piston) வளைவச்சையும் (crank) இணைக்கும் கம்பி

COOLANT - குளிர்வி

COOLING SYSTEM - குளிரலமைப்பு

COUPE - பதுங்கறை சீருந்து

COWL - முகப்புத்தாங்கி

CRANK(SHAFT) - வளைவச்சு

CRUISE CONTROL - சீர்வேகக்கருவி

CYLINDER - கலன்

CYLINDER BLOCK - கலன்கூறு - விசைப்பொறி மற்றும் கலன்களை கொண்ட கட்டகம்

CYLINDER HEAD - கலன்தலை - தீப்பொறியை மற்றும் ஓரதர்களை (valves) கொண்ட விசைப்பொறியின் பிரிக்கத்தகு பகுதி



D - வரிசை

DAMPER - அதிர்வுதாங்கி

DASHBOARD - முகப்புப்பெட்டி

DELIVERY PIPE - வழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு

DISK BRAKE - வட்டு நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு நழுவிடுக்கி (caliper) தேய்ப்பஞ்சை (break pad) சுற்றகத்தின் மீது அமுக்கும்

DOUBLE-WISHBONE SUSPENSION - இரட்டைக் கவைக்கவத் தொங்கல் சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் மேல் மற்றும் கீழ்க் கவைக்கர தொங்கல் அமைப்பு

DRUM BRAKE - உருளைய நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒரு நீரியக்க (hydraulic) உருளையம் (drum) இருந்து நிறுத்துக்கட்டைகளை தேயுருளையின் (break-drum) உட்பரப்பு மீது அமுக்கும்



E - வரிசை

ELECTRONIC FUEL INJECTION (EFI) SYSTEM - மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system)

ENGINE - விசைப்பொறி

EXHAUST (GAS) - வெளியேறி

EXHAUST (SYSTEM) - வெளியேற்றகம்

EXHAUST MANIFOLD - வெளியேற்று பன்மடிமம்



F - வரிசை

FLYWHEEL - உந்துசக்கரம்

FRONT WHEEL DRIVE - முன்னியக்க, முன்னியக்கூர்தி -

FUEL CELL - எரிபொருள் கலன்

FUEL INJECTION SYSTEM - உட்செலுத்தமைப்பு - எரிபொருளை அழுத்தத்தில் விசைப்பொறியின் எரியறைக்குள் உட்செலுத்தும் அமைப்பு



G - வரிசை

GOVERNOR - ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -

GYRATOR - கொட்பி



H - வரிசை

HATCHBACK - பொதுவறை சீருந்து



I - வரிசை

IDLE - நிலையிக்கம்

IDLE SPEED - நிலையியக்க வேகம்

IGNITION - தீமூட்டல்

IGNITION CIRCUIT - தீமூட்டுச்சுற்று - இரண்டு துணைச்சுற்றுக்கள் கொண்டது; முதன்மையது தீமூட்டுச்சாவியால் கட்டுப்படுத்தப்படுகிறது. 12V மின்னழுத்தம் மின்கலத்திலிருந்து மாறுமின்னாக்கி (alternator) மூலமாக வழங்குகிறது. அஞ்சல் மூடப்படும்போது மின்னோட்டம் அடிச்சட்டத்தில் பாய்கிறது. அஞ்சல் திறக்கும்போது, மின்னோட்டப் பாய்வு நிற்கும். இது துணைச்சுருணையில் உயரழுத்தத்தை தூண்டி வில்லிறக்கத்தால் தீமூட்டுகிறது. வாகனம் துவங்கின பிறகு மின்னழுத்த சீர்மி (voltage regulator) மின்கலம் மாறுமின்னாக்கியிலிருந்து மிகையூட்டப்படாமல் பாதுகாக்கிறது.

IGNITION SWITCH - தீமூட்டுத் திறப்பான் - ஐந்துநிலை திறப்பான். START நிலையில் தொடுநிலை (contact) ஏற்படுத்தி, சாவி RUN நிலையில் விடுவிக்கப்படுகிறது. மற்ற நிலைகள் ACCESSORIES, RUN மற்றும் OFF.

INDEPENDENT REAR SUSPENSION - தனிப்பட்ட பின்புறத் தொங்கல் - ஒவ்வொரு சக்கரமும் தினித்தியங்கும் பின்புறத் தொங்கல் அமைப்பு; இதன் மூலம் வாகனத்தில் ஒடுக்கம் மற்றும் முடுக்கத்தில் ஏற்படும் முன் மற்றும் பின் குனிவை குறைத்து பிடிப்பை மேம்படுத்துகிறது

INDICATOR - காட்டொளி

INLINE ENGINE - கலன்கள் - (cylinders) நேர்வரிசையாக உள்ள விசைப்பொறி; straight4 என்ற குறியீடு 4-கலன் நேர்வரிசை உள்ளமைவைக் குறிக்கும்; straight6 6-கலன் நேர்வரிசையைக் குறிக்கும்.

INTAKE MANIFOLD - உள்ளிழு பன்மடியம் - காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று-எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது.



J - வரிசை

JOINT - மூட்டு



K - வரிசை



L - வரிசை

LIMOUSINE - உல்லாசவுந்து



M - வரிசை

MANUAL TRANSMISSION - ஆளியக்கப் பரப்புகை

MACPHERSON STRUT - மிதவையதிர்வுதாங்கு உதைசட்டம் - நேரச்சு அதிர்வுதாங்கி கொண்டுள்ள தொங்கல் அமைப்பு; படம்

MECHANICAL STEERING - பொறிமுறைத் திருப்பி

MULTIPOINT FUEL INJECTION (M.P.F.I.) - பன்முனை உட்செலுத்தல் - இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air-fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும்



N - வரிசை

NATURALLY ASPIRATED ENGINE - இயலிழுப்பு விசைப்பொறி - சுழலூட்டு (turbo-charged) அல்லது மிகையூட்டு (super-charged) அல்லாத விசைப்பொறி

NOZZLE - நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்

NOZZLE BODY - நுனிக்குழலகம் - எரிபொருளை ஓரதருக்கு (valve) வழிகாட்டும் நுனிக்குழலின் பகுதி; இங்கு தெளிப்பியின் துளைகள் (spray openings) அமைந்துள்ளன





O - வரிசை

OVERFLOW CHANNEL - வழிவு வாய்க்கால்



P - வரிசை

PAYLOAD - தாங்குசுமை

PISTON - ஆடுதண்டு

PITMAN ARM - பிடிமுனைக்கரம்

POWER STEERING - விசைத்திருப்பி - நீரியக்க (hydraulic) மற்றும் மின்னியக்க திருப்பான் அமைப்பு; இது திரும்பும் சிரமம் குறைவாக உள்ளது

PRESSURE VALVE - அழுத்தவோரதர்



Q - வரிசை



R - வரிசை

RACK AND PINION STEERING - இத்திருப்பி அமைப்பில், பற்சிலி (rack) சக்கரங்களை இணைக்கும் அச்சாணியில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லோடி திருப்பித்தண்டில் (steering shaft) அமைந்துள்ளது. பல்லோடியும்பற்சிலியும் சக்கரத்திருப்பி அமைப்பு திருப்பியக்கத்தை சக்கர அச்சாணியின் நேரியல் இயக்கமாக மாற்றுகிறது; படம்

RADIATOR - கதிர்வீசி

REAR WHEEL DRIVE - பின்னியக்க, பின்னியக்கூர்தி -

RECIRCULATING BALL STEERING - மறுசுழல்பந்து திருப்பி - இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது. படம்



S - வரிசை

SEDAN - சரக்கறை சீருந்து

SHOCK ABSORBER - அதிர்வேற்பி

SPARK PLUG - தீப்பொறிச்செருகி

SPEED GOVERNOR - வேகக்கட்டுப்பாட்டுக்கருவி

STEERING - சக்கரத்திருப்பி

STEERING ROD - திருப்பிக் கரம்

STEERING SHAFT - திருப்பித் தண்டு

STRUT - உதைசட்டம்

SUCTION TUBE - உறிஞ்சு தூம்பு

SUPERCHARGED ENGINE - மிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி

SUPERCHARGER - மிகையூட்டி

SUSPENSION - தொங்கல்



T - வரிசை

THROTTLE - நெரிப்பி

THROTTLE-BODY - நெரிப்பகம்

THROTTLE-BODY FUEL INJECTION (TBI) - நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது

THROTTLE CHAMBER - நெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம்

THROTTLE PLATE - நெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும்

THROTTLE POSITION SENSOR (TPS) - நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும்

TURBOCHARGED ENGINE - சுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி

TURBOCHARGER - சுழலூட்டி

TYRE - வட்டகை/உருளிப்பட்டை



U - வரிசை



V - வரிசை



W - வரிசை

WORM GEAR - புழு பற்சக்கரம்



X - வரிசை



Y - வரிசை

YOLK - நுகம்



Z - வரிசை

0 comments:

Post a Comment


clock counter