Saturday, September 25, 2010 0 comments

Bபயஸ்(BIOS – Basic Input Output System), ஓர் கணினியின் மத்திய செயற்பாட்டகம்(CPU) தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய செயற்பாட்டகம் கணினி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணினியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய..




செயற்பாட்டகம் அறிந்து கொள்கின்றது? அடுத்து ஒரு கணினியின் சேமிப்பகங்கள் தமது வேலைக்கு தயார் என்பதை மத்திய செயற்பாட்டகத்திற்கு தெரிவிப்பது யார்? USB இணைப்புக்களை நிறுத்துவதும் தொடக்குவதும் யார்? இப்படியான அனைத்து வினாக்களுக்கும் ““BIOS”” என்பதே விடையாகும். ““BIOS”” என்பது இல்லாமல் ஒரு கணினியின் பல்வேறுபட்ட வன்பொருட்களின் இணைப்புப் பாலம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. ஒரு கணினியின் ஆழவாநசடிழயசன னை பொறுத்தவரையில் மத்தியசெயற்பாட்டகம் (CPU) ஒன்றிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது அதன் BIOS ஆகும். BIOS ஒரு firmware ("software on a chip") ஆகும்.


அதாவது மிகச்சிறிய இலத்திரனியல் உறுப்பு (தொகையிடும் சுற்று – IC போன்ற)
ஒன்றினுள் நிறுவப்பட்டிருக்கின்ற மென்பொருள் என்பது இதன் விளக்கம். இது கணpனியின் செயற்பாடு ஆரம்பிக்கின்ற வேளையிலேயே(system startup) அதிகமாக பல வழிகளில் தொழிற்படுகின்றது. அத்துடன் இந்தவேளையில் இதன் செயற்பாடு மிகவும் அவசியமானதும் நுணுக்கம் நிறைந்ததாகவும் அமைந்து விடுகின்றது. அதன் கருத்து இங்கு ஏதாவது குழப்பங்கள் ஏற்பட்டால் கணினியின் இயங்கு தளத்தினை ஆரம்பிப்பது இயலாது போய்விடும். எவ்வாறிருந்தபோதும் கணினியில் இயங்கு தளம் ஒன்று இயங்குவதற்கு ஆரம்பித்த பின்பு (After system startup) பயஸ் ஒன்றின் செயற்பாடு என்பது அதிகமாக இருப்பதில்லை. ஓர் கணினியை பொறுத்தவரையில் எவ்வாறான வேலைகளை BIOS செய்கின்றது. என்பது முக்கியமாகும்.




மூன்று முக்கியமான செயற்பாடுகள் இங்கு குறிப்பிடத்தக்கன. தாய்ப்பலகையில்(motherboard) இருக்கின்ற செலுத்துகை உறுப்புக்களை(Drive) அடையாளம் காணுதலும் கட்டுப்படுத்துதலும், The power-on self-test (POST) செயற்பாடு (ஒவ்வோர் முறையும் உங்கள் கணினியினை ஆரம்பிக்கின்றபோது உங்கள் கணினியின் வன்பொருட்கள் தொடர்பாக உள்ள பிழைகளை தேடுகின்ற ஒரு செயற்பாடு – CPU, system timer, Video display card, Memory, The keyboard, The disk drives என்பன சில தேடப்படும் பகுதிகளாகும்), இயங்குதளம் ஒன்றினை தேடி இயக்கும் செயல்முறை (Bootstrap loader function) என்பவையே அவையாகும்.



இன்னோர் முக்கியமான விடையம், ஒரு கணினியயை பொறுத்தவரையில் BIOS ஒன்று தன்னந்தனியாக செயற்பட முடியாது. அது இயங்குவதற்கு வேறு இரண்டு முக்கிய உறுப்புக்களின் உதவிதேவைப்படுகின்றது. அதாவது ஒன்று CMOS நினைவகம் (memory - இங்கேயே உங்களால் பயஸ் தொடர்பாக செய்யப்படுகின்ற அனைத்து மாற்றங்களும் சேமித்து வைக்கப்படகின்றன), மற்றையது CMOS பட்டறி (battery) இங்குதான் பயஸ் இயங்குவதற்கான மின்சாரம் வழங்கப்படுகிறது. அது பயஸ் தொடர்பான அடிப்படை விடையங்கள் சில.

0 comments

விழிய அட்டை (Video card), பெரும்பாலும் தாய்ப்பலகையில் இணைத்து பயன்படுத்தப்படும் ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும் தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது. பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற வகைகளை..




கொண்ட செருகிகளுக்கான விழிய அட்டைகள் பாவனையில் இருந்தன. ஆனால் இன்று பெரும்பாலான கணனிகள் PCI – Bus மற்றும் AGP போன்றவற்றுக்கு பொருத்தமான அட்டைகளே பாவனையில் உள்ளன.



1994 -1997 காலப்பகுதியில் PCI – Bus பெரும்பாலான கணினிகளில் விழிய அடடையினை இணைப்பதற்கான பிரதான செருகியாக தொழிற்பட்டது. ஆனால் பெண்டியம் - II கணினிகள்
வரத்தொடங்கியதும் அதி வேக விழிய அட்டைகளை இணைக்கக்கூடிய AGP இணைப்புக்களுடனான தாய்ப்பலகைகள் மற்றும் விழிய அட்டைகள் வரத்தொடங்கின. இன்று அதிகமாக பாவனையில் உள்ள இவை இரண்டினையும் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். AGP செருகி இணைப்புக்களில் 4 வகை உண்டு. AGP 3.3 Volt (V) , AGP 1.5V, AGP Universal, AGP Pro என்பவையே அவையாகும். AGP 3.3 Volt (V) என்ற செருகியில் AGP 1x and 2x போன்ற விழிய அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. AGP 1.5V என்ற செருகி இணைப்பில் AGP 4x and 8x போன்ற விழிய அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.




AGP Universal செருகிகளில் AGP 1x இல் இருந்து AGP 8x வரையான விழிய அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. AGP Pro பார்வையில் AGP Universal போன்றே தோன்றினாலும் இதில் மேலதிக மின்னழுத்தத்தினை பெறுவதற்கான இணைப்புக்கள் காணப்படும். ஒரு விழிய அட்டையினை
பொறுத்தவரை அறிந்திருக்கவேண்டிய மற்றைய இரு முக்கிய விடையங்கள் Accelerator Chip மற்றும் Video BIOS Chip என்பனவாகும். Accelerator Chip ஒரு கணினியின் திரைக்காட்சிகளில் உயர் தெளிவு மறும் முப்பரிமான காட்சிகளின் மெருகூட்டல் என்பனவற்றோடு ஆழமான நிற வண்மை என்பவற்றையும் கொடுக்கின்றது. இந்தவகை விழிய அட்டைகள் ஒரு மென்பொருளினால் செயற்படுத்தப்பட வேண்டியவை அதற்காக இவ்வகை விழிய அட்டைகளின் தொழிற்பாட்டுக்காக Driver எனப்படுகின்ற வன்பொருள் இயக்கத்துக்கான எளிய மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.




இது ஒரு கணினியில் உயர் தர காட்சிகளை அமைப்பதற்கு ஒரு விழிய அட்டைக்கு
அடிப்படையான ஒரு மென்பொருளாகின்றது. Video BIOS Chip என்பதும் ஒரு கணினியின் திரைக்காட்சிக்கான அடிப்படை உறுப்புக்களை உருவாக்குகின்றது. ஒரு கணினியில் Accelerator Chip இயங்குவதற்கு முன் இயங்கத்தொடங்கி கணினித்திரையில் எழுத்துக்களை தோற்றுவிக்கின்றது. Windows 9x/Me போன்ற இயங்கு தளங்களில் Safe Mode எனவும் பின்பு VGA Mode எனவும் அழைக்கப்படும் கணினி திரையின் தோற்றங்கள் Video BIOS Chip மூலமே தோற்றுவிக்கப்படுகின்றன.



Friday, September 24, 2010 0 comments

சின்னப்புள்ளி…

கம்ப்யூட்டர்களில் தகவல்களை சேமித்து வைக்க `ஹார்டு டிஸ்க்’ எனப்படும் நினைவுத்தகடு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல செல்போன்கள், டிஜிட்டல் கேமிராக்கள் போன்றவற்றில் தகவல்களை பதிவு செய்ய `மெமரி கார்டு’ வசதி உள்ளது.



கொள்திறனுக்கு ஏற்ப இந்த நினைவுத்தகடுகள் கிடைக்கின்றன. ஆரம்ப காலகட்டங்களில் இந்த நினைவுத்தகடுகள் அளவில் பெரிதாக இருந்தன. தொழில்நுட்பம் வளரவளர சிறிய ஸ்டாம்ப் அளவில் உள்ள மெமரி கார்டில் பலநூறு பக்கங்கள் உள்ள தகவல்களை சேமிக்கும் வசதி உருவானது. இப்போது நானோ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதைவிட பலமடங்கு சேமிப்பு வசதி, ஆனால் மிகச்சிறிய மெமரி கார்டு என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.



இந்த வகையில் வந்துள்ள புதிய தொழில்நுட்பம் தான் `நானோ டாட்ஸ்’. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பகுதியைச்சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நானோ டாட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெமரி கார்டு என்பது ஒரு சதுர அங்குலம் அளவில் இருக்கும்.



இந்தச் சிறிய `சிப்’-ல் லட்சக்கணக்கான `நானோ டாட்’ கள் இடம்பெற்று இருக்கும். இவை காந்த தொழில்நுட்பத்தில் இயங்கும். அடுத்த கட்டமாக லேசர் தொழில்நுட்பத்தில் இதை இயக்கும் வகையில் ஆய்வுகள் நடக்கிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இதைவிட அதிக அளவில் தகவல்களை சேமிக்கும் வகையில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மெமரி கார்டுகள் தயாரிக்கப்படும்.

Tuesday, September 21, 2010 0 comments

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.





“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது.





உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது.



இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு. இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது.



இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது.



இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது.



மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம்.



ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது? நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும்.



இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும்.



இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.


clock counter