Saturday, September 25, 2010

விழிய அட்டை (Video card), பெரும்பாலும் தாய்ப்பலகையில் இணைத்து பயன்படுத்தப்படும் ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும் தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது. பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற வகைகளை..




கொண்ட செருகிகளுக்கான விழிய அட்டைகள் பாவனையில் இருந்தன. ஆனால் இன்று பெரும்பாலான கணனிகள் PCI – Bus மற்றும் AGP போன்றவற்றுக்கு பொருத்தமான அட்டைகளே பாவனையில் உள்ளன.



1994 -1997 காலப்பகுதியில் PCI – Bus பெரும்பாலான கணினிகளில் விழிய அடடையினை இணைப்பதற்கான பிரதான செருகியாக தொழிற்பட்டது. ஆனால் பெண்டியம் - II கணினிகள்
வரத்தொடங்கியதும் அதி வேக விழிய அட்டைகளை இணைக்கக்கூடிய AGP இணைப்புக்களுடனான தாய்ப்பலகைகள் மற்றும் விழிய அட்டைகள் வரத்தொடங்கின. இன்று அதிகமாக பாவனையில் உள்ள இவை இரண்டினையும் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். AGP செருகி இணைப்புக்களில் 4 வகை உண்டு. AGP 3.3 Volt (V) , AGP 1.5V, AGP Universal, AGP Pro என்பவையே அவையாகும். AGP 3.3 Volt (V) என்ற செருகியில் AGP 1x and 2x போன்ற விழிய அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. AGP 1.5V என்ற செருகி இணைப்பில் AGP 4x and 8x போன்ற விழிய அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.




AGP Universal செருகிகளில் AGP 1x இல் இருந்து AGP 8x வரையான விழிய அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. AGP Pro பார்வையில் AGP Universal போன்றே தோன்றினாலும் இதில் மேலதிக மின்னழுத்தத்தினை பெறுவதற்கான இணைப்புக்கள் காணப்படும். ஒரு விழிய அட்டையினை
பொறுத்தவரை அறிந்திருக்கவேண்டிய மற்றைய இரு முக்கிய விடையங்கள் Accelerator Chip மற்றும் Video BIOS Chip என்பனவாகும். Accelerator Chip ஒரு கணினியின் திரைக்காட்சிகளில் உயர் தெளிவு மறும் முப்பரிமான காட்சிகளின் மெருகூட்டல் என்பனவற்றோடு ஆழமான நிற வண்மை என்பவற்றையும் கொடுக்கின்றது. இந்தவகை விழிய அட்டைகள் ஒரு மென்பொருளினால் செயற்படுத்தப்பட வேண்டியவை அதற்காக இவ்வகை விழிய அட்டைகளின் தொழிற்பாட்டுக்காக Driver எனப்படுகின்ற வன்பொருள் இயக்கத்துக்கான எளிய மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.




இது ஒரு கணினியில் உயர் தர காட்சிகளை அமைப்பதற்கு ஒரு விழிய அட்டைக்கு
அடிப்படையான ஒரு மென்பொருளாகின்றது. Video BIOS Chip என்பதும் ஒரு கணினியின் திரைக்காட்சிக்கான அடிப்படை உறுப்புக்களை உருவாக்குகின்றது. ஒரு கணினியில் Accelerator Chip இயங்குவதற்கு முன் இயங்கத்தொடங்கி கணினித்திரையில் எழுத்துக்களை தோற்றுவிக்கின்றது. Windows 9x/Me போன்ற இயங்கு தளங்களில் Safe Mode எனவும் பின்பு VGA Mode எனவும் அழைக்கப்படும் கணினி திரையின் தோற்றங்கள் Video BIOS Chip மூலமே தோற்றுவிக்கப்படுகின்றன.



0 comments:

Post a Comment


clock counter