மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் கணினி
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.
வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.
அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.
இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது.
இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும். அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும். இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே.
சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.
சிடி, டிவிடிக்களை அடுத்து, இனி நம்மிடம் பரவலாகப் பயன்படுத்தப்படப் போவது புளு ரே டிஸ்க்குகளே. புளு ரே ஆடியோ விசுவல் சாதனங்களுக்கு இந்தியாவில் சரியான மார்க்கட்டைத் தரும் வகையில், சோனி இந்தியா நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சாதனங்களில் பல மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் தொடக்க விலை ரூ.9,990 ஆக இருக்கும். இந்த சாதனங்களுடன் புளு ரே டிஸ்க்கில் 500க்கும் மேற்பட்ட மூவிக்களையும் சோனி தருகிறது.
புளு ரே டிஸ்க் பிளேயர்ஸ், ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ், பிளே ஸ்டேஷன் 3 மற்றும் VAIO ஆகியவை இந்த வரிசையில் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. இவை, ஹை டெபனிஷன் படங்களையும், தெளிவான ஆடியோக்களையும் தரும். மேலும் இவற்றைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பினையும் பெறலாம். எனவே படங்களைப் பார்த்து ரசிக்கும்போதும், இசையைக் கேட்டு பரவசப்படும் போதும், கேம்ஸ் விளையாடி மகிழும் போதும் மற்றும் இவை அனைத்தையும் ரெகார்ட் செய்து இயக்கிப் பார்க்கும் போதும், நமக்கு புளு ரே தொழில் நுட்பம் உடன் இருக்கும்.
அதன் மூலம் ஹை டெபனிஷன் உலகம் நமக்குக் கிடைக்கும். அடுத்த நிதி ஆண்டிற்குள், புளு ரே சாதனங்கள் மார்க்கட்டில் 60% பங்கினை, சோனி இந்தியா நிறுவனம் கைப் பற்ற முயற்சிகளை எடுக்கிறது. இவற்றை விற்பனை செய்திடும் 4,000 மையங்களை, இந்தியா முழுவதும் திறக்க இருக்கிறது.