Sunday, August 29, 2010 0 comments

மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் கணினி

இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.



கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.



கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.



ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

Monday, August 23, 2010 0 comments

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.



அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.



இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது.



இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும். அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும். இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே.



சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.

Friday, August 13, 2010 0 comments

சிடி, டிவிடிக்களை அடுத்து, இனி நம்மிடம் பரவலாகப் பயன்படுத்தப்படப் போவது புளு ரே டிஸ்க்குகளே. புளு ரே ஆடியோ விசுவல் சாதனங்களுக்கு இந்தியாவில் சரியான மார்க்கட்டைத் தரும் வகையில், சோனி இந்தியா நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சாதனங்களில் பல மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் தொடக்க விலை ரூ.9,990 ஆக இருக்கும். இந்த சாதனங்களுடன் புளு ரே டிஸ்க்கில் 500க்கும் மேற்பட்ட மூவிக்களையும் சோனி தருகிறது.



புளு ரே டிஸ்க் பிளேயர்ஸ், ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ், பிளே ஸ்டேஷன் 3 மற்றும் VAIO ஆகியவை இந்த வரிசையில் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. இவை, ஹை டெபனிஷன் படங்களையும், தெளிவான ஆடியோக்களையும் தரும். மேலும் இவற்றைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பினையும் பெறலாம். எனவே படங்களைப் பார்த்து ரசிக்கும்போதும், இசையைக் கேட்டு பரவசப்படும் போதும், கேம்ஸ் விளையாடி மகிழும் போதும் மற்றும் இவை அனைத்தையும் ரெகார்ட் செய்து இயக்கிப் பார்க்கும் போதும், நமக்கு புளு ரே தொழில் நுட்பம் உடன் இருக்கும்.

அதன் மூலம் ஹை டெபனிஷன் உலகம் நமக்குக் கிடைக்கும். அடுத்த நிதி ஆண்டிற்குள், புளு ரே சாதனங்கள் மார்க்கட்டில் 60% பங்கினை, சோனி இந்தியா நிறுவனம் கைப் பற்ற முயற்சிகளை எடுக்கிறது. இவற்றை விற்பனை செய்திடும் 4,000 மையங்களை, இந்தியா முழுவதும் திறக்க இருக்கிறது.

Sunday, July 11, 2010 0 comments

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.

இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.

இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.

என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.

இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

Thursday, March 18, 2010 0 comments

மதர்போர்டு:
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கம்ப்யூட்டர் தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?

மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.

மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி.

ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டர் வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது.

கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.

ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு.

இதற்கு மாற்றாக 100MB கொள்ளளவு கொண்ட ஜிப் ட்ரைவ், MO டிஸ்க் ட்ரைவ் போன்றவை சந்தையில் இருந்தாலும் விலை அதிகமென்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதிகமாக வரவில்லை.

சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.

சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.

மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.

Thursday, February 18, 2010 0 comments

Run commands and shortcut keys (July 09, 2009)


Type the following commands in your Run Box (Windows Key + R) or Start Run


devmgmt.msc = Device Manager

msinfo32 = System Information

cleanmgr = Disk Cleanup

ntbackup = Backup or Restore Wizard (Windows Backup Utility)

mmc = Microsoft Management Console

excel = Microsoft Excel (If Installed)


msaccess = Microsoft Access (If Installed)

powerpnt = Microsoft PowerPoint (If Installed)

winword = Microsoft Word (If Installed)

frontpg = Microsoft FrontPage (If Installed)

notepad = Notepad

wordpad = WordPad

calc = Calculator

msmsgs = Windows Messenger

mspaint = Microsoft Paint


wmplayer = Windows Media Player

rstrui = System Restore

netscp6 = Netscape 6.x

netscp = Netscape 7.x

netscape = Netscape 4.x

waol = America Online

control = Opens the Control Panel

control printers = Opens the Printers Dialog


 



WIN Key = Display or hide the Start menu.

WIN Key+BREAK = Display the System Properties dialog box.

WIN Key+D = Show the desktop.

WIN Key+M = Minimize all windows.

WIN Key+Shift+M = Restores minimized windows.

WIN Key+E = Open My Computer.

WIN Key+F = Search for a file or folder.

CTRL+WIN Key+F = Search for computers.

WIN Key+F1 = Display Windows Help.


WIN Key+ L = Lock your computer if you are connected to a network domain, or switch users if you are not connected to a network domain.

WIN Key+R = Open the Run dialog box.

WIN Key+U = Open Utility Manager.

0 comments

டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

பைல்களை (எக்ஸெல் , வேர்ட் , பி.பி.டி.போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker)

ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும்.

எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.

முகவரி: கிளிக்



2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word)

எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.

முகவரி :கிளிக்



3. பி.டி.எப். கிராக் (PDFCrack)

நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம். கீழே உள்ள தளம் செல்லுங்கள் . அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.

முகவரி :கிளிக்



4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline)

எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்ற கீழே உள்ள முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.

முகவரி :கிளிக்



5. பி.டி. பைண்ட் (PD Find)

கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.

முகவரி :கிளிக்



6. பி.டி.எப். வியூ (PDFVue)

அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.

முகவரி :கிளிக்


7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter)

எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும்.

முகவரி : கிளிக்




8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF)

எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள ஒவ்வொரு பைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.

முகவரி :கிளிக்




9.கவுண்ட் ஆன் இட் (Count On It)

பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம். PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.

முகவரி : கிளிக்



10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF)

இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும்.

முகவரி: கிளிக்


clock counter